கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு இன்று ஹேப்பி பர்த்டே !
லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்தியவர்; இவரின் சாதனைகளும் ஏராளம்.
1990களில் சர்வதேச கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
இவர் பங்கேற்கும் போட்டிகளைப் பார்ப்பதற்காகவே பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்துக்குச் செல்லாமல் 90ஸ் ரசிகர்கள் பலரும் லீவு எடுப்பர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை டெண்டுல்கர் படைத்துள்ளார்.
அர்ஜூனா, கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், பாரத ரத்னா உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கவுரவ ராஜ்ய சபா எம்பியாகவும் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வர்ணனை செய்வதில் தற்போதும் 'பிஸி'யாக உள்ளார்.