உடல் உஷ்ணத்தை குறைக்கும் காய்கறிகள்!
கோடைக்காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை சீக்கிரம் ஏற்படும்.
அப்போது தலைவலி, ஒற்றை தலைவலி, மயக்கம், முகப்பரு, உதட்டில் வெடிப்பு ஏற்படும்.
இவற்றை தவிர்க்க, நீர்ச்சத்து குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
உணவில் வெள்ளை பூசணி, சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி அதிகப்படியான உடல் வெப்பத்தையும் தணிக்கும். உடலையும் பாதுகாக்கும்.
தினமும் உணவுக்கு முன் ஒரு கப் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு அதிகமாகாமல் சீராகவும் இருக்கும்.
வழக்கமாக குடிக்கும் நீரில் துளசி விதைகளை ஊற வைத்து குடிப்பது, வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடுவது உடலை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும்.
வெயில் காலத்தில் செரிமான பிரச்னை நிறைய பேருக்கு வரும். அவர்கள் கூடுமான வரை காரம் நிறைந்த, அதிகம் மசாலா கலந்த உணவை தவிர்க்கவும்.