கோடையில் ஏன் மாம்பழம் சாப்பிட வேண்டும்?

மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி6, நார்ச்சத்து, பொட்டாஷியம், மெக்னீஷியம் மற்றும் புரதம் ஆகிய சத்துகள் உள்ளன.

தினசரி வைட்டமின் சி தேவையில், 67 சதவீதத்தை ஒரு கப் மாம்பழம் ஈடு செய்கிறது.

225 கிராம் மாம்பழத்தில், 76 சதவீதம் வைட்டமின் சி, 25 சதவீதம் வைட்டமின் ஏ, 11 சதவீதம் வைட்டமின் பி6 உள்ளன.

இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; கண் பார்வையை மேம்படுத்துகிறது; செரிமானத்தை சீராக்குகிறது.

நார்ச்சத்து மற்றும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை உருவாக்கும். பிரதான என்சைம்கள், ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

இந்த சீசனில் தினமும் சாப்பிடும் மாம்பழத்தில் இருந்து கிடைக்கும் இவ்வளவு சத்துக்களும், அடுத்த சீசனில் மாம்பழம் கிடைக்கும் வரை பலன் தரும்.