வெப்ப அலை… ரொம்ப நேரம் 'கிச்சனில்' நிற்காதீங்க பெண்களே…

வீட்டில் தான் இருக்கிறோம் என எண்ணாமல் பெண்களும் இந்த கோடை வெப்ப அலையில் இருந்து வரும் பாதிப்புகளை உணர்ந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைவு, சோடியம் அயனி குறைவு, அதிக வெப்பத்தால் உடல் இயங்க முடியாமல் இதய அடைப்பு, மூளை செயலிழப்பு திறனால் குழப்பம் ஏற்படலாம். சிலருக்கு படபடப்பு, மயக்கம், மரணம்கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

உடல் அதிக சோர்வடைவதை மன அழுத்தம், படபடப்பு, வேலையில் கவனமின்மை போன்ற அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம்.

வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் குறிப்பாக பி.பி., சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து சமையலில் ஈடுபட்டால் வியர்வையால் படபடப்பு, உடல் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க அவ்வப் போது வெளியே வந்து காற்றோட்டமாக இருக்க வேண்டும். உடல் கேட்கும் ஓய்வை தரவேண்டும்.

அடுப்படி காற்றோட்டமாக இருக்க வேண்டும். அங்குள்ள வெப்பத்தை வெளியேற்றும் வகையில் 'எக்ஸாஸ்டர் பேன்' அல்லது 'சிம்னி' இருக்க வேண்டும்.

மதிய நேரத்தில் வெளியில் செல்வது, பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். உடல் தேவைக்கு ஏற்ப 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், ஜூஸ்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்