முதலில் ஷாம்பு போட்டு தலையில் இருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும்.

தலைமுடியை வெதுவெதுப்பான (கொதிக்க வைத்த தண்ணீர் இல்லை) நீரில் நனைத்துக் கொள்ளவும்.

உள்ளங்கையில் சிறிதளவு ஷாம்பு எடுத்துக்கொண்டால் போதும்.

பின்னர் ஷாம்பு நுரையை அலசிவிட்டு கண்டிஷனரை முடியில் தடவி 3 நிமிடம் ஊறவிட்டு கழுவிக்கொள்ளுங்கள்.

எண்ணெய்ப் பசையுடைய முடி உள்ளவர்கள் அடிக்கடி தலைக்குளிக்க வேண்டும். இல்லையெனில் தூசுக்கள் எண்ணெய் பசையில் ஒட்டி பொடுகு உருவாகி கூந்தல் பாதிப்படையும்.

குறைந்த அளவு ஷாம்பு பயன்படுத்துங்கள். அது முடியை சேதப்படுத்தாது.