இந்த சம்மருக்கு தப்பிக்க... உலகின் சிறந்த மலை நகரங்கள் சில !

கனடாவின் பான்ஃப் ஆல்பைன் மரங்களால் சூழப்பட்ட அழகிய மலை நகரமாகும். மொரெய்ன் ஏரியின் கம்பீரமான சிகரங்கள், பான்ஃப் தேசிய பூங்காவின் அமைதியான அழகால் பார்வையளர்கள் குவிகின்றனர்.

மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான மோன்ட் பிளாங்கின் அடிவாரத்தில் அமைந்துள்ள சாமோனிக்ஸ், மலையேறும் பாரம்பரியத்துடன் கூடிய துடிப்பான ஆல்பைன் நகரமாகும்.

ஜெர்மாட், சுவிட்சர்லாந்து... ஆல்ப்ஸில் மலைக்கு அடியில் இயற்கைபிரியர்களை ஈர்க்கும் இந்த மலை நகரில், குளிர்காலத்தில் பனிச்சறுக்கு, கோடையில் ஹைகிங், மவுண்டன் பைக்கிங், பாராகிளைடிங் புகழ்பெற்றது.

மச்சு பிச்சு இடிபாடுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள மச்சு பிச்சு பியூப்லோ, உயரமான சிகரங்கள் மற்றும் பசுமையான மேகக் காடுகளால் சூழப்பட்ட ஒரு அழகான மலை நகரமாகும்.

ஆஸ்பென், அமெரிக்கா... இது ஆடம்பரம் மற்றும் அழகு இரண்டையும் வெளிப்படுத்தும் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட் நகரமாகும்.

குயின்ஸ்டவுன், நியூசிலாந்து... தெற்கு ஆல்ப்ஸ், வகாதிபு ஏரியின் தெளிந்த நீரின் பின்னணியில் உள்ள குயின்ஸ்டவுன், இயற்கை அழகால் சூழப்பட்ட சாகச விளையாட்டு மைதானமாகும்.

கார்டினா டி ஆம்பெஸ்ஸோ, இத்தாலி... உலகத் தரம் வாய்ந்த பனிச்சறுக்கு, மேல்தட்டு ஷாப்பிங் மற்றும் டேஸ்டியான உணவுக்காக அறியப்பட்ட ஒரு அழகிய மலை ரிசார்ட் நகரமாகும்.

பிளெட், ஸ்லோவேனியா... ஜூலியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், அழகிய ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ள பிளெட் விசித்திரமான பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.