நான் ஸ்டிக் பாத்திரங்களும், பராமரிப்பும்!

தற்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாலிடெட்ராஃப்ளூரூரோடீன் (PTFE) என்ற கெமிக்கல் இல்லாமலேயே நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் ( PFOA ) எனப்படும் அபாயகரமான ரசாயனத்தைக் கொண்ட டெஃப்ளானைப் பயன்படுத்தி நான் ஸ்டிக் பான்கள் தயாரிக்கப்படுகின்றன.

ரசாயனத்தில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் அதை பயன்படுத்தும் முறையைப் பொறுத்தே சாதகம் பாதகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்போதும் மீடியம் தீயில் சமைக்க வேண்டும். கண்டிப்பாக அதிக வெப்பத்தில் சமைக்கக் கூடாது. அதேபோல் சமைக்காமல் வெறும் பாத்திரத்தை நீண்ட நேரம் தீயில் வைக்கக் கூடாது.

முடிந்த வரை சிலிக்கான் அல்லது மரத்தினால் செய்யப்பட்ட கரண்டியை பயன்படுத்தவும். ஸ்டீஸ் கரண்டி கீரல்களை ஏற்படுத்தும் அதனால் அதை தவிர்க்கவும்.

குறைந்த அளவில் எண்ணெய் பயன் படுத்துவது சிறந்தது.

கழுவும் போது ஸ்பாஞ்சுகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கம்பி நார் கொண்டு அழுத்தி தேய்க்க கூடாது.

எப்போது பாத்திரத்தில் உள்ள கோட்டிங் உறிந்து போகிறதோ, உடனே அவற்றை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அதன் துகள்கள், உணவில் கலந்து அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.