ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் மூச்சுக்குழாயில், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு. இது இளைப்பு நோய் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமா நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை (மே 7ம் தேதி) 'உலக ஆஸ்துமா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது

1998ல் உலக ஆஸ்துமா தினத்தை உலகெங்கிலும் ஆஸ்துமா விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக் தொடங்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகம் முழுவதும் சுமார் 235 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஆஸ்துமா தினத்தின் கரு, ஆஸ்துமா குறித்த கல்வி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.

மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், இருமல், மார்பு இறுக்கம் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகள்.

வைரஸ் தொற்றுகள், துாசி, தொழிற்சாலையின் நச்சுப்புகை, மகரந்தம், விலங்குகளின் ரோமம், இறகுகள், வாசனை திரவியங்கள் ஆகியவை ஆஸ்துமாவை துாண்டும் காரணிகள்.

நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள் மற்றும் மூச்சுப் பயிற்சியின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

காற்றில் கார்பன் மோனாக்சைடு போன்ற சில நச்சுக்காற்று கலப்பதால் சுவாசம் மூலம் மனிதனுக்கு காற்று மாசு சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதில் நுரையீரல் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாத்து, மரங்களை பெரும் அளவில் நட்டு, தூய்மையான காற்றை உருவாக்கி , ஆரோக்கியமான சூழலை அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டும்.