நச்சுகளை நீக்கும் கோதுமைப்புல் சாறு…

கோதுமைப்புல்லில் கால்சியம், இரும்புச் சத்து, மக்னீசியம், 17 அமினோ அமிலங்கள், குளோரோபைல் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, ஈ மற்றும் கே எல்லாம் நிறைந்தது.

ஒரு தொட்டியில் கறுப்பு மண்ணில் கோதுமையை விதைத்து, கோதுமைப் புல், விளைந்ததும், அதன் மேல் பாகத்தை, 'கட்' செய்து, அரைத்து, தினமும், இரண்டு அவுன்ஸ் குடிக்கலாம்.

செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், வாயு, வீக்கம் மற்றும் வயிற்று அசெளகரியம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், சீராக இருக்கவும் கோதுமை இலைச்சாறு உதவுகிறது. இதயத்துக்கும் நல்லது.

ஈரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது. பெருங்குடலில் உள்ள என்ற பாகத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது.

முக்கியமாக புற்றுநோயை வர விடாது. புற்றுசெல்கள் அதிகரிக்காமல் தடுக்கும்; அவர்களின் வாழ்நாட்களையும் அதிகரிக்கும்.

கோதுமைப் புல்லில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். உடலில் கெட்ட கொழுப்பை விரைவில் கரைக்கும்.

இது சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் இதை தவிர்க்கலாம்.