குழந்தைகளின் வளர்ச்சிக்கு இதையெல்லாம் தரலாம் !

தேன்... வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இதை தர முயற்சிக்கலாம். ஒரு வயது முடிந்தவுடனேயே குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக தேன் கொடுக்கத் துவங்கலாம்.

ஓமம்... ஓமத்தண்ணீரை அவ்வப்போது குடிக்கும் போது செரிமானப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது.

புதினா... பாலை விட புதினாவில் கால்சியம் சத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கசாயமாகவோ அல்லது சட்னியாகவோ தரலாம். நுரையீரல் ஆரோக்கியமும் மேம்படும்.

பேரீச்சை... உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் வகிக்கிறது.

உலர் பழங்கள் மற்றும் விதைகள்... தினமும் பாதாம், முந்திரி என ஏதாவது ஒரு உலர்பழங்கள் மற்றும் விதைளை சாப்பிடும்போது, ஆரோக்கியம் மேம்படும்.

பருப்பு மற்றும் முழு தானியங்களில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்றாட உணவில் இதன் பங்கு மிகவும் இன்றியமையாதது.