சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?
சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. காரணம். அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
உணவை பொறுமையாக உமிழ் நீருடன் மென்று அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பலருக்கு சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது பழக்கமாக இருக்கும். கண்டிப்பாக அதை தவிர்க்கவும்.
சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்.
அதேப்போல் சாப்பிடுவதற்கு முன்பும் தண்ணீர் குடிக்கக் கூடாது. காரணம் , வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது.
உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காமல் போகலாம்.
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது.
உணவு காரமாக இருந்தால் மட்டும் மொத்தமாகக் குடிக்காமல், கொஞ்சமாக, அதுவும் ஒவ்வொரு மடக்காக அருந்தலாம்.