சண்டே அன்று ஒன்டே கிளீனிங் செய்ய சில டிப்ஸ்…
வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு பகுதியை பிரித்துக் கொடுக்கலாம். வேலை மிகவும் சுலபமாக மற்றும் விரைவாக நடக்கும்.
பின் சுத்தம் செய்வதற்குத் தேவையான துடைப்பம், கிருமிநாசினி திரவம், ஒட்டடை குச்சி, துடைக்கும் துணி போன்றவற்றை எடுத்து வைக்கவும்.
பணியை துவக்கும் முன் மொபைல் அல்லது டிவியில் பாடல் போட்டவும். பின் அதை கேட்டபடியே வேலையைப் பார்க்கலாம். சுத்தம் செய்வதும் கொண்டாட்டமாக இருக்கும்.
ஒட்டடை அடிக்கும் முன், சோபா, டிவி, போன்ற பொருள்களின் மேல் தூசுகள் படாமல் இருக்க, அவற்றின் மேல் துணியையோ, பிளாஸ்டிக் கவர் அல்லது பழைய பேப்பர்களையோ கொண்டு மூடவும்.
வீட்டின் தரையை சுத்தம் செய்ய நீங்கள் வினிகர் அல்லது எலுமிச்சையை கூட பயன்படுத்தலாம். டைல்ஸ்கள் எளிதில் சுத்தமாகும், துர்நாற்றம் நீங்கும்
சமையலறையில் அடுப்பு, டைல்ஸ் பகுதிகளில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து அந்த இடங்களில் தெளித்துவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
கதவின் கைப்பிடிகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி தெளித்து ஒரு துணியில் துடைக்கவும். அதேபோல் சுவிட்ச் போர்ட்டை லேசாக நனைந்த ஈரத் துணியால் துடைக்கவும்.
நம் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலும் கிருமிகள் நிறைந்திருக்கும். பிளாஸ்டிக் பொருட்கள் என்றால், ஊறவைத்து கழுவவும். சாஃப்ட் டாய்ஸ் என்றால் துவைத்து எடுக்கவும்.
வாஷ் பேசின், கழிவறை, பாத் டைல்ஸ் பகுதிகளில் கிருமி நாசினியை தெளித்து ஊறவைத்து பின் சுத்தம் செய்ய வேண்டும். ஈரம் இல்லாமல் தண்ணீரை நீக்கிவிடவும்.