பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை மாற்றுவது எப்படி?

தற்போது பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளின் சின்ன அழுகை, பிடிவாதத்தை தாங்கமுடியாமல் கேட்பதை வாங்கிக் கொடுக்கும் மனநிலைக்குச் சென்றுவிடுகின்றனர்.

பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் மிரட்டி, அடித்துவிட்டு பின்னர் கேட்டதை வாங்கித் தருவார்கள். இதுவும் தவறான அணுகுமுறை.

குழந்தைகள் வீட்டில் நினைத்ததைச் சாதிக்க முடியாது என்பதற்காக, வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும், விருந்தினர்கள் முன்பும் அடம்பிடிப்பார்கள்.

எப்போதும் குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டாமல் கண்டுகொள்ளாமல் இருக்கும் நடைமுறையை நாம் பயன்படுத்த வேண்டும்.

அடம் பிடித்து அழும் குழந்தையோடு கண் தொடர்பு கொண்டு பேசுவதும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும். தண்டனைக்குப் பதிலாக பிரச்னையைத் தீர்க்க குழந்தையிடம் பேசுங்கள்.

ஒவ்வொரு பொருளையும் அவர்கள் கேட்கும் போது அதற்கு சமமான உழைப்பை அவர்களிடமிருந்து பெறுவதை பெற்றோர்கள் வழக்கமாக்கி கொள்வது நல்லது.

முடிந்தவரை இரண்டு - நான்கு வயதிலேயே குழந்தைகளின் அடம்பிடிக்கும் போக்கை நீக்க வேண்டும். சிறு வயதிலேயே குழந்தைகளின் பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்ல பலனை தரும்.

குழந்தையின் பிடிவாதத்தை அன்பு கரம் கொண்டு, கொஞ்சம் உறுதியாக மாற்றுவது என்பதை ஒரு கலையாக பெற்றோர்கள் பின்பற்றத் துவங்கினால் பிள்ளைகளின் மாற்றமும் எளிதில் சாத்தியமாகும்.