பஹத் பாசிலுக்கு ஏடிஎச்டி : கவனக்குறைவு பாதிப்பை சிறு வயதில் சரி செய்ய முடியுமா?

41 வயதில் தனக்கு கவனக்குறைவு மற்றும் அதீத செயல்பாடு குறைபாடு (ஏடிஎச்டி) உள்ளதாக பஹத் பாசில் கூறியது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

ஏடிஎச்டி நோயை குணப்படுத்தி விடலாமா என மருத்துவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் சிறு வயதிலேயே இந்த நோயை கண்டுபிடித்து இருந்தால் குணப்படுத்தி இருக்கலாம் என கூறியதாகவும் பஹத் பாசில் தெரிவித்துள்ளார்.

ஏடிஎச்டி குறைபாடு என்பது மூளையில் ஏற்படும் நரம்பு தொடர்பான பிரச்னை. எந்தக் காரணத்தால் நரம்புக்கடத்திகள் மெதுவாகச் செயல்படுகின்றன என்பது இன்னமும் மருத்துவ உலகில் கண்டறியப்படவில்லை.

அறிகுறி : ஏ.டி.ஹெச்.டி பாதிப்புள்ள குழந்தைகள் கவனமின்மை , அதீத இயக்கம் (Hyperactivity), உணர்ச்சி வேக செயல்பாடுகள் (Impulsivity) ஆகியன மிகுந்தவர்களாக காணப்படுவார்கள்.

குழந்தைகளிடன் ஏடிஹெச்டி இருப்பதை கண்டுபிடித்தால் அவற்றை, சிறப்பு பயிற்சிகள், மருந்துகள் மூலம் குணபடுத்துவது எளிதானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏடிஎச்டி உள்ள குழந்தைகள் வெகுநேரத்துக்கு ஒரே இடத்தில் இருக்க முடியாது. எங்கு சத்தம் கேட்டாலும் அங்கே ஓடிவிடுவார்கள். விளைவைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள். இவர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது.

அவர்களது கவனச்சிதறலை ஒழுங்குபடுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்துவதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைபெற்று, நடத்தைவழி சிகிச்சை (Behaviour Therapy) மேற்கொள்ள வேண்டும்.

ஏடிஎச்டி இருந்தால் மூளையில் ரசாயன மாற்றங்கள் நிகழும். அதைச் சரிசெய்வதற்கான மருந்து, மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையுடன் தரலாம்.