குழந்தைகளின் மூளை திறனை அதிகரிக்கும் உணவுகள்
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் முக்கியமான கோலின், வைட்டமின் பி12, புரதம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் அதிகம் உள்ளன.
குழந்தைகளின் மூளையின் செயல்பாட்டிற்குக் கொழுப்பு அவசியம். அதிக புரதம் நிறைந்த முழு கொழுப்புள்ள தயிர், தகவல்களை வழங்குவதற்கும்,பெறுவதற்கும் மூளை செல்களை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.
கீரைகள் மற்றும் காய்கறிகளில் குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளது.கீரைகளில் கரோட்டினாய்டு அதிகமுள்ளதால் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தலாம்.
மீனில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது அறிவாற்றல் குறைதல் மற்றும் நினைவாற்றல் இழப்பிலிருந்து பாதுகாக்கிறது.
குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் முளையின் ஆரோக்கியம் உட்பட பொது ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும்.