வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள் சில !
துளசி...தினமும் ஓரிரு துளசி இலைகளை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஹெர்பல் டீயாக போட்டு குடிக்கலாம்.
பிரண்டை... லேசான காரத்தன்மை உடைய பிரண்டை எலும்புகளை பலப்படுத்தவும், வாயுப் பிடிப்பை நீக்கவும், மூலத்துக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
மூலிகைச் செடிகளில் ஒன்றான புதினா அனைவருக்கும் பரிட்சயமான கீரையாகும். ஆரோக்கியம் மட்டுமின்றி புத்துணர்ச்சியையும் தரக்கூடியதாகும்.
வெந்தயக்கீரை... பாரம்பரிய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப்பொருட்களில் ஒன்று வெந்தயம். வயிற்றுவலி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளதால், அவ்வப்போது உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.
கற்றாழை... உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமம், கூந்தல் அழகை மேம்படுத்தவும் இது பயன்படுகிறது. கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக உள்ளது.
கற்பூரவல்லி, தூதுவளை மற்றும் லெமன் கிராஸ் உட்பட பல்வேறு மூலிகைச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம்.