சியா மற்றும் சப்ஜா விதைகள் வித்தியாசம் அறிவோமா!!
சியா மற்றும் சப்ஜா விதைகள் பார்ப்பதற்கு ஒன்று போல் தெரியலாம். ஆனால் அவற்றை உற்று நோக்கும்போது தான் அவை வெவ்வேறு என்று தெரியும். அவற்றின் வித்தியாசத்தை பற்றி தெரிஞ்சுக்கலாம் இதோ.
சியா விதைகள் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டவை. அவை புரதம், ஒமேகா -3, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.
சப்ஜா விதைகள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது. இதில் நார்ர்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளன. மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
சியா விதைகள் என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதைகள் ஆகும். சப்ஜா விதைகள் திருநீற்றுப் பச்சிலை என்கிற தாவரத்தின் விதைகளாகும்.
சியா விதைகள் சப்ஜா விதைகளை விட சிறியதாக இருக்கும். சியா விதைகள் வெள்ளை, கறுப்பு மற்றும் சாம்பல் என்ற மூன்று நிறங்களிலும் கலந்து காணப்படும். சப்ஜா விதை கறுப்பு நிறத்தில் இருக்கும்.
சியா விதைகள் மெதுவாக தண்ணீரை உறிஞ்சி 10 மடங்கு அளவில் பெரிதாக ஜெல் மாதிரி மாறிவிடும். சப்ஜா விதைகள் சீக்கிரமே தண்ணீரை உறிஞ்சி அளவில் சியா விதைகளை விட பெரிதாகி விடும்.
சியா விதை எந்த உணவில் சேர்க்கிறீர்களோ அந்த உணவின் சுவைக்கேற்ப அவை ஒத்துப்போகும். சப்ஜா விதைகளில் எதில் சேர்த்தாலும் துளசியின் சுவை சற்று தெரியும்.