முகப்பருக்களை தவிர்க்க இதோ சில டிரிக்ஸ் !
குளிப்பதற்கு அரை மணி நேரம் முன், சோற்றுக் கற்றாழை தடவலாம்.
துாங்குவதற்கு அரை மணி நேரம் முன், முல்தானிமட்டி பன்னீர் கலந்து குழைத்து முகத்தில் தடவி, காய்ந்ததும் கழுவலாம்.
குப்பைமேனி பொடியில் பன்னீர் கலந்து குழைத்து தடவலாம். குப்பைமேனி இலையில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட் உள்ளதால், பாக்டீரியாக்களை அழித்து, பருக்களை போக்கும்.
உடலை குளிர்ச்சியாக வைக்க, சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடிக்கலாம்.
மோருடன் சோற்றுக்கற்றாழை, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, புதினா கலந்து குடிக்கலாம்.
நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது, காய்கறி, பழங்கள் சாப்பிடுவது, காபி, டீக்கு மாற்றாக மோர், பழச்சாறு, காய்கறி சாலட் என்று தினமும் ஒன்றை சாப்பிடலாம்.
அரிசி சாதம் குறைவாகவும், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் அதிகம் சாப்பிடுவது முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.