விரல்களுக்கு வலிகளை தரும் அதிகப்படியான மொபைல் பயன்பாடு...
கை, கால் வலிகளை தாண்டி தற்போது விரல்களையும் வலிகள் தாக்குவதுண்டு. மொபைலை ஒரே கையில் பிடித்து பயன்படுத்துவதால் விரல்கள் இழுத்துப் பிடித்து வலியை உண்டாக்கும்.
மணிக்கட்டின் நடுப்பகுதியில் இருக்கும் மீடியன் நரம்பு மொபைல்போனில் அதிகம் நேரம் பேசும்போது அழுத்தப்படலாம். இதனாலேயே கட்டைவிரல் மற்றும் அதையடுத்து மோதிரவிரலில் வலியை உண்டாக்கும்.
மொபைல் போன் மட்டும் அல்லாமல், அதிக அளிவில் பைக் ஓட்டுவதாலும், அதிகப்படியாக கரண்டி பிடித்து சமைக்கும் போதும் இந்த வலி ஏற்படும்.
வலியை உணரும் போது விரல்களுக்கு ஓய்வு தர வேண்டும். தினமும் சில நிமிடங்கள் விரல்களை விரித்து மடிக்கி பயிற்சி செய்யலாம்.
அப்படியும் வலி குறையாதவர்களுக்கு வலி நிவாரண மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது.
அதையும் தாண்டி அந்த நரம்பு பாதிப்பு அதிகமிருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். மீடியன் நரம்பை மூடியிருக்கும் இடத்தை அறுவைசிகிச்சை மூலம் சீர் செய்யப்படும்.
வலி பாதிப்பு உள்ளவர்கள் செல்போனை கையில் வைத்துப் பேசும்போது மீடியன் நரம்பை அழுத்தாமலும் உபயோகிக்க வேண்டும். நீண்டநேரம் மொபைல் போனை கையில் வைத்துப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.