பித்தப்பை கல் வர காரணங்களும், அதற்கான தீர்வுகளும்!
கல்லீரலில் சுரக்கும் பித்த நீரை தேக்கி வைத்து, உணவுடன் கலந்து செரிமானத்திற்கு உதவுவதுதான் பித்த நீரின் வேலை.
40 வயது கடந்த உடல் பருமன் உள்ள பெண்களுக்கு அதிகளவில் பித்தப்பையில் கல் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதனால் அடிக்கடி வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படக்கூடும். மேலும் வலது பக்கம் மேல்வயிறு, முதுகுவலியும் இருக்கும் என கூறப்படுகிறது.
இது பித்தப்பாதையில் மாட்டிக்கொண்டால் மஞ்சள் காமாலை பாதிப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்கேன் பரிசோதனை செய்தால் பித்தப்பையில் உள்ள கற்கள் பற்றி தெரியும்.
வலி இருக்கும் சமயத்தில் பருப்புகள், கிழங்குகள், காரம் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.