உலகின் ஆழமான 7 ஏரிகள் !

சைபீரியாவிலுள்ள பைக்கால் ஏரி ( 5,387 அடி) பூமியின் ஆழமான, பழமையான ஏரி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தள பட்டியலில் உள்ளது. அழகிய பனிக்கட்டிகள் சூழ்ந்த இந்த ஏரி இயற்கை ஆர்வலர்களின் பொக்கிஷமாகும்.

ஆப்பிரிக்காவின் டாங்கன்யிகா ஏரி (4,823 அடி), உலகின் இரண்டாவது ஆழமான மற்றும் உலகின் மிக நீளமான நன்னீர் ஏரியாகவும் உள்ளது. மீன்பிடித்தல் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.

காஸ்பியன் கடல் ( 3,363 அடி) தொழில்நுட்ப ரீதியாக பூமியின் மிகப்பெரிய ஏரியாகும்; யூரேசியாவில் 5 நாடுகளின் எல்லையாக உள்ளது. மாசுபாடு, அதிகளவிளான மீன்பிடித்தல் காரணமாக சுற்றுச்சூழல் சவால்கள் நிறைந்துள்ளன.

அண்டார்டிகாவின் பனிக்கட்டி மேற்பரப்புக்கு அடியில் மறைந்திருக்கும் வோஸ்டாக் ஏரி (2,953 அடி) மிகவும் புதிரான நீர்நிலைகளில் ஒன்றாகும்.

சிலி - அர்ஜென்டினா இடையேயான எல்லையிலுள்ள ஓ'ஹிக்கின்ஸ்/சான் மார்ட்டின் ஏரி ( 2,742 அடி) அமெரிக்காவின் ஆழமான ஏரிகளில் ஒன்று. இயற்கை மற்றும் சாகசப்பிரியர்களை இந்த பனிப்பாறை ஏரி வெகுவாக ஈர்க்கிறது.

ஆப்பிரிக்காவின் மலாவி ஏரி (2,316 அடி) தெளிவான நீர் மற்றும் பல்லுயிரிகளுக்காக புகழ்பெற்றது. வண்ணமயமான சிக்லின் மீன்களின் தாயகமாகும்.

கிர்கிஸ்தானின் இசிக்-குல் (2,192 அடி) உலகின் மிகப்பெரிய, ஆழமான ஆல்பைன் ஏரிகளில் ஒன்றாகும். பனி மூடிய சிகரங்கள், பசுமையான காடுகள், வெப்ப நீரூற்றுகள் என இயற்கைபிரியர்களை கவர்கிறது.