எடையை குறைக்க விரும்புவோர் ஓட்ஸ் சாப்பிடலாமா?

ஓட்ஸில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், போலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இப்படி பல சத்துக்கள் உள்ளன.

இதன் ஊட்டச்சத்து மிகவும் சீரானது. அதேபோல் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. மேலும் இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் அனைத்தும் உள்ளன.

இதில் சக்திவாய்ந்த பீட்டா-குளுக்கன் ஃபைபர் உள்ளது. இது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என பல ஆய்வுகள் காட்டுகின்றன.

ஓட்ஸ் உணவுடன் சேர்த்து பழங்கள், தண்ணீர் போன்ற குறைவான கலோரி கொண்டவற்றை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் பிரபலமான காலை உணவாகும்.

ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், செரிமான அமைப்பு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். மேலும் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

எடையை குறைக்க விரும்புவோர் 3 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் சாப்பிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்பவும் ஓட்ஸ் உணவைக் காலையில் சாப்பிட வேண்டும் அல்லது இரவு கடைசி உணவாகச் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும். காய்கறிகளை எல்லாம் சேர்த்து கிச்சடி போல் எடுக்கலாம்.