பிரிக்க முடியாதது... டயட்டும்.. சப்பாத்தியும்!! எவ்வளவு சாப்பிடலாம்...
டயட் என்று ஆரம்பிச்சாலே முதல் தேர்வு சப்பாத்தி தான். சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் நிரம்பியுள்ளது. ஆகவே, இது உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
முழுமையான கோதுமை கொண்டுத் தயாரிக்கப்படும் சப்பாத்தியில் பி1, பி2, பி3, பி6, பி9 மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் அதிகளவில் நிரம்பியுள்ளன. இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், அயோடின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
சப்பாத்தியில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருப்பதால், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி செய்கிறது.
சுமார் 6 அங்குலம் அளவுள்ள சப்பாத்தியில் 15 கிராம் கார்ப்ஸ், 3 கிராம் புரதம் 0.4 கிராம் நார்ச்சத்துகள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.
உங்களுடைய எடை இழப்பு மற்றும் உங்களுக்கான கார்போஹைட்ரேட் தேவையை பொருத்தே சப்பாத்தியின் எண்ணிக்கையை நிர்ணயிக்க முடியும்.
சப்பாத்தி குறைந்த கலோரி கொண்டது தான் அதற்காக நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதிகம் எடுத்தாலும் எடையில் எந்த மாற்றமும் இருக்காது.
டயட் இருக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு மீடியம் சைஸில், எண்ணெய் சேர்க்காமல் 4 சப்பாத்தி வரை மட்டுமே எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கூடவே காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் இரவு உணவிற்கு சப்பாத்தி எடுத்துக் கொள்ள விரும்பினால் 7.30 மணிக்கு முன்னாள் சாப்பாட்டை முடித்து விடுங்கள்.