கத்தரிக்காய் நிறங்களும் மருத்துவ குணங்களும்!

கத்தரிக்காயில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அடங்கியுள்ளன.

இதைத்தவிர, மாங்கனீசு, வைட்டமின் ஏ, சி, பி1, பி2, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

கத்தரிக்காயில், 'சோலாசோடின்' எனும் ரசாயனம் உள்ளது. மாரடைப்பு மற்றும் கல்லீரல் வீக்கத்தை தவிர்க்க வழங்கப்படும் மாத்திரைகளில், இந்த ரசாயனம் தான் உள்ளது.

ஆன்டி ஆக்சிடண்ட் மட்டுமல்ல, நீல கத்தரிக்காயில் வலி நிவாரண குணமும் இருக்கிறது. இதனால், இது அதிக காய்ச்சலை குறைக்கிறது.

பச்சை நிற கத்தரிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, பருவகால நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

வெள்ளை நிற கத்தரிக்காய், குறைந்த கலோரி கொண்டது. நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.

கத்தரிக்காயில் உள்ள பாலிபினால்கள் கட்டி வளர்ச்சி மற்றும் புற்றுநோய் செல்கள் படையெடுப்பதை தடுப்பதுடன், புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பையும் ஊக்குவிக்கிறது.

உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. மழை காலத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்க கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.