உயிரை பறிக்கும் மெத்தனால் கலந்த சாராயம்… பாதிப்புகள் குறித்து அறிவோமா…

மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த திரவம் நிறமற்றும் இலேசானதாகவும் காணப்படும்

தடை செய்யப்பட்ட மெத்தனால் அதிகளவு போதை தரும். அதே நேரத்தில் மனித உயிரையே பறித்து விடும், தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும்.

அபாயகரமான மெத்தனால் கொண்டு செய்யப்படும் சாராயம் வயிற்றுக்குள் சென்றவுடன் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும்.

மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் முதலில் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அது எல்லாம் நுரையீரலுக்குச் சென்று சட்டென்று மூச்சை அடைத்துவிடும்.

பின் அது நரம்பு மண்டலம் வழியாக அதன் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் சுயநினைவை இழப்பார்கள்.

சிலருக்கு இந்த பாதிப்பால் கண் தெரியாமல் அல்லது காது கேட்காமல் போதும்.

பாதிப்பின் உச்சமாக இறுதியில் மரணம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். போதைக்காக இதை ஒரு போதும் எடுத்து கொள்ளக்கூடாது.