சிவப்பு திராட்சை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது.
மாரடைப்பை தடுக்க உதவும்... சிவப்பு திராட்சையை தொடர்ந்து உட்கொள்வது ஒருவரை அனைத்து வகையான இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும்... இதில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் உள்ளது; ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தாது.
எடை குறைப்புக்கு உதவும்... பருமனான உடல் கொண்டோர், எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிவப்பு திராட்சை ஒரு சரியான தீர்வாகும்.
பார்வைத்திறனை மேம்படுத்தும்... இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும், ஃபிளாவனாய்டுகள் கண் செல்கள் நன்றாக செயல்பட உதவுகின்றன.
சிவப்பு திராட்சையில் போதுமான அளவு கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.