40 பிளஸ் பெண்களுக்கு புரதம் ஏன் முக்கியம்?

பொதுவாக பெண்கள் 40 வயது கடந்த பிறகு குறிப்பாக மாதவிடாய் நிறுத்த காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் படிப்படியாக குறையும்.

இதனால் எலும்புகளின் வலிமை படிபடியாக குறையக்கூடும். இதை தடுக்கவே மாதவிடாய் நிற்கும் பெண்கள் அதிகமாக புரதம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அனைவரின் உடல் வளர்ச்சிக்கும் புரதம் முக்கியமான கட்டுமான பொருள் தான். குறிப்பாக பெண்களுக்கு புதிய செல்கள் உருவாக்கவும், சேதமடைந்த செல்களை சரி செய்யவும் அது அடிப்படை தேவையாக உள்ளது.

40 வயது எட்டியவுடன் பெண்களின் வளர்சிதை மாற்றம் குறைந்து எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் அது அதிக கொழுப்பு மற்றும் தசை விகிதத்துக்கு வழிவகுக்கும்.

இப்படியான சூழலில் மெனோபாஸ் நிற்கும் பெண்கள் புரதத்தை தவிர்ப்பது தசை இழக்கும் அபாயத்தை உண்டு செய்யலாம். எலும்புகளும் வலு இழக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை தவிர்க்க 40 வயதை கடந்த பெண்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தினமும் இரு வேளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சைவம் உண்பவர்கள் கொழுப்பு நீக்கிய பால், தயிர், கொழுப்பு இல்லாத சீஸ், பாதாம், பருப்புகள், பூசணி விதைகள், வேர்க்கடலை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.