வைட்டமின் டி சப்ளிமெண்ட் யாருக்கு அவசியம்?
ஒரு தனிநபரின் வைட்டமின் - டி அளவு, ஒரு மில்லிலிட்டர் ரத்தத்தில் 20 நானோ கிராம் இருக்க வேண்டும்.
இயற்கையாகவே வைட்டமின் டி சத்து சூரியனில் வெளிப்படும் போது உடல் உற்பத்தி செய்கிறது. ஆனால் பலருக்கு இது போதுமான அளவு கிடைக்காமல் இருக்கலாம்.
இதனால் தான் டாக்டர்கள் வைட்டமின் டி சப்ளிமெண்ட் பரிந்துரைக்கக்கிறார்கள்.
சில மருத்துவ நிபுணர்கள் வாரத்துக்கு ஒரு முறை சற்று அதிக அளவுள்ள வைட்டமின் டி மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள்.
வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக உள்ள நிலையில் 8 வாரங்களுக்கு 60,000 IU என்ற வாராந்திர டோஸ்கள் எடுக்க பரிந்துரைப்பார்கள்.
அதை தொடர்ந்து அவர்களின் வைட்டமின் டி அளவு 20 ng/mL நானோகிராம் பெற்றவுடன் நாள் ஒன்றுக்கு தேவைக்கு ஏற்ப டோஸ் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவாக வைட்டமின் மாத்திரைகளை காலை உணவிற்கு பின் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இரவில் எடுத்துக்கொண்டால் தூக்கத்தை தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.