பால் அலர்ஜியா? மாற்று இருக்கு கவலைய விடுங்க!

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பால் மற்றும் அனைத்து பால் பொருட்களையும் முழுவதுமாகத் தவிர்த்தல் நலம். பசும்பால் இல்லாமல் வேறென்ன பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியமும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது. தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் கொண்டது.

கேழ்வரகை நன்கு ஊறவைத்து பால் எடுத்து மிதமான தீயில் கிளறவும். பால் திக்காகும் போது ஏலப்பொடி, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் கலந்து இறக்கவும். கால்சியம் அதிகம் உள்ளது. ஊட்டச்சத்துகள் நிறைந்தது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

சோயா பாலில் புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு சோயா பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் உயரும்.

இரவு முழுவதும் பாதாமை ஊற வைத்து, காலையில் அதை மிக்ஸியில் ஊறவைத்த தண்ணீர், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி அதை பாலாக எடுக்கவும். உடல் எடை அதிகரிக்க உதவும். பார்வைத்திறன் மேம்படும். சருமம் பொலிவு பெறும்.

இரவு முழுவதும் ஊற வைத்த முந்திரியை மிக்ஸியில் ஊறவைத்த தண்ணீர், ஏலக்காய், பேரீச்சை பழம் ஆகியவற்றை போட்டு நன்கு அரைக்கவும். பின் வடிகட்டி பாலாக எடுக்கவும். உடலில் நல்ல கொழுப்பு சேரும். உடல் மெலிந்த குழந்தைக்கு சிறந்த உணவு.

நிலக்கடலை பாலில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் இ, நியாசின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. நிலக்கடலையை ஊறவைத்து பால் எடுக்க வேண்டும்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலை பாலைக் குடித்து வந்தால், அதிக அளவில் ஏற்படும் ரத்தப்போக்கைத் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாகவும் எலும்புகள் வலிமையாகவும் இருக்கும்.