தேவையானவை: பலாப்பழம் - எட்டு சுளை, கொப்பரைத் தேங்காய் - கால் மூடி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும், நெய் - ஆறு தேக்கரண்டி

முந்திரி - பத்து, உலர்திராட்சை - பத்து, தேங்காய்ப்பால் - அரை லிட்டர், வெல்லம் - 200 கிராம்.

செய்முறை: ஒவ்வொரு பலாச்சுளையையும், சதுர வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய பலா துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கவும்.

பின், வாணலியில் மீதமிருக்கும் நெய்யிலேயே முந்திரி, உலர் திராட்சை, சின்ன துண்டுகளாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை போட்டு வதக்கி ஆறவிடவும்.

வெல்லத்தை கரைத்து வடிகட்டி, தனியாக ஒரு கப்பில் எடுத்து வையுங்கள்.

அடுப்பை மூட்டி, வாணலியை வைத்து, அதில் வதக்கிய பலாத்துண்டுகளைப் போட்டு, வெல்லக் கரைசலை ஊற்றவும்.

பின் திராட்சை, முந்திரி, கொப்பரைத் தேங்காய் போட்டு, இரண்டு நிமிடம் நன்கு கிளறி, இறக்கவும். பின், தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து அருந்தலாம்.