சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் போலிக் அமிலம்!
போலிக் அமிலம் ( போலேட்) உடலுக்கு வைட்டமின் பி9-ஐ அளிக்கிறது. தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமினான இது உடலுக்குத் தேவையான புரதச் சத்தை அதிகரித்து டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலுக்குத் தேவையான சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போலிக் அமிலம் உதவும். உடலில் போலிக் அமிலத்தை மேம்படுத்தும் உணவு வகைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
முட்டையில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. மேலும் இதில் புரதம், செலினியம், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்றவையும் உள்ளன. தினமும் ஒரு முட்டை உங்கள் உணவில் சேர்த்து வரலாம்.
பட்டாணி, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் புரதத்தை தாண்டி போலிக் சத்தும் அதிகமாக உள்ளது. தினமும் குழம்பு அல்லது சூப் போன்று பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ப்ரக்கோலியில் போலிக் அமிலம் 14 சதவீதம் உள்ளது. மேலும் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் தாதுக்களும் பல உள்ளன.
அவகேடோ பழத்தில் போலேட், வைட்டமின் சி உட்பட பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சக்திவாய்ந்த பைட்டோ கெமிக்கலும் உள்ளது.
ஒரு கப் பீட்ரூட் 136 கிராம் அளவில் 148 மில்லி கிராம் போலிக் அமிலம் உள்ளது. அதேபோல் கேரட்டில் போலிக் அமிலம் நிறைவாக உள்ளது. 1 கப் கேரட்டில் 128 கிராம் அளவில் 24.3 மில்லிகிராம் போலேட் உள்ளது.
வேர்க்கடலை நிறைவான அளவு போலிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள போலிக் அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிகம் உதவும்.
வாழைப்பழத்தில் 1 கப் அளவில் மசித்ததில் 225 கிராம் அளவில் 45 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. தினசரி வைட்டமினில் 11 சதவீதம் உள்ளது. போலேட் உடன் உடலுக்கு ஆன்டி பாடிகளை கொடுக்கும்.