புளித்த தயிரை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
தயிரில் கிடைக்கும் கால்சியம் நம் எலும்புகளை வலிமையாக்கும். மேலும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். இதில் உள்ள புரோட்டீன் தசை வலிமையை மேம்படுத்தும்.
இதில் வைட்டமின்கள் பி12, சி, ரிபோஃப்ளேவின், பாந்தோதெனிக் ஆசிட் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.
புளித்த தயிரிலுள்ள புரோபயாடிக்ஸ் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாடிற்கும் பெரிதும் உதவும்.
சளி மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் புளிப்பு தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் புளிப்பு தயிரை எடுத்து கொண்ட பிறகு செரிமான கோளாறு, உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
உடல் வலி, மூட்டு வலி போன்ற வலி தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் புளிப்பு தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது
தயிர் அதிகம் புளித்து விட்டால் அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கினால் தயிர் புளிப்பின்றி சுவையாக இருக்கும்.