மன அழுத்தத்தை குறைக்கும் புதினா டீ !
தேவையான பொருட்கள்: புதினா இலைகள் 10 - 15, தண்ணீர் - 1 கப், தேன் அல்லது சர்க்கரை - தேவையானளவு, எலுமிச்சை துண்டு - சிறிதளவு.
புதினா இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டவும்.
விருப்பப்பட்டால், தேன் அல்லது சர்க்கரை சேர்த்து, சிறிது எலுமிச்சை துண்டுகளை சேர்க்கலாம்.
சூடாக குடிக்கும்போது, புத்துணர்ச்சி கிடைக்கக்கூடும்.
இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
மேலும், மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.