கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' செய்வது எதற்காக?
கர்ப்ப காலத்தில் குறைந்தது ஐந்தாறு முறை வழக்கமாக 'ஸ்கேன்' பரிசோதனை செய்யப்படும்.
ஆறாவது வாரத்தில் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு ஸ்கேன் செய்யப்படும்.
பின் 10 - 12 வாரங்களில் கருவின் வளர்ச்சியை பார்ப்ம்பதற்கு ஒரு முறை ஸ்கேன் செய்யப்படுகிறது.
20வது வாரத்தில் பிறவிக் கோளாறுகள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக, 'அனாலமலிஸ் ஸ்கேன்' எடுக்கின்றனர்.
குடும்பத்தில் மரபணு பிரச்னை இருந்தால், குறையுள்ள குழந்தைகள் பிறக்குமோ என்ற அச்சத்தில் இருப்பவர்கள், 'ஹோல் எக்ஸ்சோம் சீக்வென்சிங்' என்ற மரபணு பரிசோதனை செய்து கொள்ளலாம்.
எந்த மரபணுவில் குறை என்பது தெரிந்து விடும். கருவிலேயே அல்லது குழந்தை பிறந்த பின் சரி செய்யக்கூடியதாக இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன் கர்ப்பத்தை தொடரலாம்.
மேலும் பனிக்குடத்தின் அளவு இயல்பாக உள்ளதா என்பதை அறிய, 30 வாரங்களுக்குப் பின் பனிக்குடத்தின் அளவு, குழந்தையின் நிலை பற்றி அறிய அடிக்கடி ஸ்கேன் செய்யப்படும்.