தினமும் ஒரு பேரிக்காய்.. ஊட்டத்தை அள்ளித் தரும்!!

பச்சை ஆப்பிள் போலக் காட்சியளிக்கும் பேரிக்காய் குழந்தைகள் முதல் பெரியோர்வரை அனைவரும் சாப்பிடவர். இதன் ஆரோக்கியப் பலன்கள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?

பேரிக்காயில், நார்ச்சத்து அதிகம். 'கேடிசின்ஸ்', 'ப்ளாவனாய்டு' போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ளன. தினமும், ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

பேரிக்காய் தோல் பகுதியில் அதிக அளவு உள்ள தாவர ஊட்டச் சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகிறது.

செரிமானம் எளிதாகி பசி தூண்டப்படும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

இதய படபடப்பு உள்ளவர்களுக்கு பேரிக்காய் மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைத் கட்டுப்படுத்தும்.

சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம். அவர்களது எலும்புகளும், பற்களும் வலுப்பெற பேரிக்காய் துணை புரிகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் அதிகளவில் சுரக்கும்.

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் காலை பேரிக்காய் சாப்பிட்டால் மலம் எளிதாக வெளியேறும்.