பித்தத்தை குறைக்க உதவும் உணவுகள் குறித்து அறிவோமா…
தூங்கி எழுந்தவுடன் சிலருக்கு பித்தம் அதிகமாக இருக்கும். இதனால் பல் துலக்கும் போது பித்த வாந்தி கூட உண்டாகும்.
இதில் இருந்து விடுபட பித்தத்தை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை குறித்து அறிந்து கொள்வோமா.
அவாரம்பூ குடிநீர் உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதை அடிக்கடி குடித்து வந்தால் பித்தம் குறையும். மேலும் நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவும்.
இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும்.
இஞ்சிச் சாறுடன், எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் தேன் கலந்து குடித்தால் பித்தம் குறையும்.
சீரகத்தை நன்கு கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
ரோஜாப்பூவை கஷாயமாக வைத்து, அத்துடன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டால் பித்த நீர் கழிவுடன் சேர்ந்து வெளியேறும்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் உடலில் நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். எனவே, பித்தம் உள்ளவர்கள் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம்.