தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால்...!
கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, பி2 மற்றும் சி, இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதிலுள்ள இரும்புச்சத்து உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, ரத்தச்சோகையை நீக்குகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கொத்து கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட, நாளடைவில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
கறிவேப்பிலையில் உள்ள மியூட்டாஜெனிக் பண்புகள் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிப்பதோடு, அவை உருவாவதையும் தடுக்கும்.
உடலிலுள்ள கெட்டக் கொழுப்பை குறைப்பதால், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கலாம். இதய நோய்களை வரவிடாமல் தடுக்கக்கூடிய நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கிறது.
தினமும் காலையில் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால், சிறுநீரகத்தில் தேங்கியிருக்கும் கழிவுகள் நீக்கப்பட்டு அதன் செயல்பாடு மேம்படுகிறது.
வளர்ச்சியை தூண்டி, கூந்தல் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. கூந்தல் உதிர்வு, இளநரை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள கால்சியம் சத்து, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட செரிமானப் பிரச்னை, வயிறு மந்தமாக இருப்பது, மலச்சிக்கல் போன்றவைக்கு தீர்வு கிடைக்கிறது.