கோடைக்கால வெப்ப நோய்கள்: குழந்தைகளைப் பாதுகாப்பது அவசியம்...!

குளிர்காலத்தைப் போலவே, கோடைக் காலமும் கூட பல உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.

ஜங்க் ஃபுட் மற்றும் சர்க்கரை கலந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், சிறு குழந்தைகளுக்கு அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை மற்றும் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோடையில் சுகாதாரமற்ற உணவு அல்லது தண்ணீர் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.

கோடையில் குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம்.

கோடையில் குழந்தைகள் வெளியில் செல்வதால் வரும் ஹீட் ஸ்ட்ரோக் காய்ச்சலை ஏற்படுத்தும். மேலும் இதனால் சில சமயங்களில் உயிரிழக்க நேரிடும்.