ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கும் மைக்ரேன்!
மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலிக்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்று வரை அறியப்படவில்லை.
அவை மூளையில் சுரக்கும் செரோடோனின் என்ற ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
மைக்ரேன் தலைவலி ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கிறது. ஒற்றைத் தலைவலி கிளாசிக் மைக்ரேன் மற்றும் பொதுவான ஒற்றைத் தலைவலி என்று இரு வகைப்படும்.
ஒற்றைத் தலைவலியில் குமட்டல், வாந்தி, ஒளி, சத்தத்திற்கு சகிப்புத்தன்மை குறைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
மேலும் நரம்பியல் கோளாறு கண் பார்வையில் மாற்றங்கள், பின் கழுத்து வலி, உடல் சோர்வு, மந்தமான பேச்சு, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளும் சிலருக்கு வெளிப்படும்.
சூரிய வெப்பம், காற்றோட்டம் இல்லாத அறைகளில் தங்குவது, இரவில் அதிக நேரம் கண் விழித்து டிவி, மொபைல் பார்ப்பது மூளையை பாதிக்கும். ஆகியனவும் மைக்ரேன் வர காரணங்களாகும்.
மது, இறைச்சி, துரித உணவு, குளிர்பானங்கள், சைனஸ் தொற்று, பதற்றம், மனச் சோர்வு, மாதவிடாய், கருத்தடை மருந்துகள் போன்றவையும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம்.
இயற்கை மருத்துவ முறைகளில் அக்குபங்க்சர், வாசனை எண்ணெய் மசாஜ், வண்ண சிகிச்சை, யோகா, மூச்சு பயிற்சி, நீர் சிகிச்சை போன்றவை நல்ல பலன் தரும்.
தினசரி உணவில் காய்கறிகள் சேர்ப்பதும், உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்வதும் அவசியம். உடற்பயிற்சியும் செரடோனை அதிகம் சுரக்க செய்து, மகிழ்ச்சியான மனநிலை ஏற்படுத்தும்.