சில்லுன்னு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் !

மனித உடலின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமானது.

நாகரிக மாற்றத்தால் பலரும் ஃபிரிட்ஜ் வைக்கப்படும் குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால், அது ஆரோக்கியத்தை நாளடைவில் பாதிக்கக்கூடும்.

முதலில் தலை பகுதியில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் தான், குளிர்ந்த நீரை பருகியவுடன் தலைவலி ஏற்படுகிறது.

மேலும், கழுத்து நரம்புகள் தாக்கப்பட்டு, இதயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தொடர்ச்சியாக குளிர்ந்த நீரை குடிப்பதால் உடல் வெப்ப சமன்பாடு சீர்குலையும். ஜலதோஷம், தொண்டையில் புண் வரும் அபாயமுள்ளது.

குளிர்ந்த நீர் வயிற்றை இறுக்கமடையச் செய்வதால், செரிமானப் பிரச்னை உண்டாகும் ; மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடலில் சேரும் கொழுப்புகள் கரைவது கடினமாகிறது; உடல் எடை அதிகரிக்கக்கூடும்.