கால்கள் அடிக்கடி மரத்துப் போக காரணம் இதுதான் !
நாம் ஒரே இடத்தில் பல மணிநேரம் அசையாமல் அமர்ந்திருக்கும்போது ரத்தவோட்டம் தடைபடுவதன் காரணமாக கால் மற்றும் பாதங்கள் மரத்துப் போகின்றன.
உடல் உறுப்புகள் மரத்துப்போவது நோய் இல்லை. ஆனால், நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
2 கால்களும் மரத்துப் போனால் அது நீரிழிவு பாதிப்புக்கான அறிகுறி ஆகும். ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்னை இருந்தால் மரபணு கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது.
ஆன்டிபயாடிக், புற்றுநோய் மாத்திரை சாப்பிட்டாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்துப்போகும். மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இப்பிரச்னை ஏற்படலாம்.
உடல் எடை அதிகரித்து, அதிகளவு கொழுப்பு சேர்ந்தாலும் மரத்துப்போகும் பிரச்னை ஏற்படும். இதனை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை முறையாக அளித்தாலே சரிசெய்யலாம்.
வைட்டமின் பி-12 குறைபாடுகள் இருந்தாலும் கை, கால் மரத்துப்போகும் பிரச்னை ஏற்படும். இப்பிரச்னை நீங்க வைட்டமின் பி-12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.
மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும், அதிக நேரம் கணினியில் உட்கார்ந்தவாறு மற்றும் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், மரத்துப்போகும் பிரச்னை ஏற்படும்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் உடலுக்கு அவ்வப்போது அசைவு தந்தால் இப்பிரச்னை நீங்கும்.
மேலும் தினசரி உடற்பயிற்சி, அல்லது நடைப்பயிற்சி அவசியமானது.