சைவ உணவர்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பருப்பு வகைகள் !
பாசிப்பருப்பு அல்லது பச்சைப் பருப்பில் மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், துத்தநாகம், ஃபோலேட் வைட்டமின்கள் மற்றும் புரதம், நார்சத்து நிரம்பியுள்ளன.
இது எளிதில் ஜீரணம் ஆகும். கொழுப்பு குறைந்தது. ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தக் கூடியது.
உளுந்துப்பருப்பில் புரதம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை குவிந்துள்ளன. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் எளிதாகும்.
எலும்புகளை பலப்படுத்தக் கூடியது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும். உளுந்து கஞ்சி, உளுந்தங்களி என ஆரோக்கியமாக செய்து தரலாம்.
துவரம்பருப்பில் புரதம், பொட்டாசியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஃபோலிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக துவரை இருப்பதால், நரம்புக் குழாய் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும்.
வறுகடலை அல்லது பொட்டுக் கடலையில் புரதம், ஃபோலேட், துத்தநாக கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன.
இது குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.