சுவையான பூண்டு துவையல் அரைப்பது எப்படி!
பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு சிறந்த உணவாக இருக்கிறது பூண்டு.
பூண்டில் ஊறுகாய், துவையல், சட்னி பல வகைகளில் தயார் செய்யலாம்.
அந்த வகையில், பூண்டு சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் என எல்லாவற்றிற்கும் ஏற்ற சூப்பரான சட்னியாகும்.
தேவையான பொருட்கள்: பூண்டு பல் - 20, காய்ந்த மிளகாய் - 8; கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு - சிறிதளவு; புளி, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: பூண்டை உரித்து, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அது சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு இறக்கவும். சுவைமிக்க, 'பூண்டு துவையல்' தயார்.
பணியார வகைகளுக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. உடல் நலனை காக்கும்!