வீட்டில் நறுமணம் கமழ... சில டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் நறுமணங்களுடன் கூடிய மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தால் வீடு நறுமணத்துடன் இருக்கும்.
சிகரெட் புகை வாடை படிந்த அறையில் ஒரு கிண்ணத்தில் வினிகரை வைத்தால், அது புகை வாடையை உறிஞ்சிக் கொள்ளும்
ஒரு கப் தண்ணீரில் லாவெண்டர் எண்ணெய் போன்ற எசன்ஷியல் ஆயிலை சில துளிகள் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, அறையில் ஸ்பிரே செய்தால் அறை முழுவதும் மணமாக இருக்கும்.
ஷூ, சாக்ஸ் அணியும் முன், பாதத்தில் சிறிது டால்கம் பவுடரை பரவலாக துாவினால், கால்களில் வியர்வை நாற்றம் அடிக்காது
'பேக்கிங் அவன்'னில் உள்ள வாடையை நீக்க, அதில் சில லவங்கப்பட்டைகளை, 10 நிமிடங்கள் சூடாக்கவும். நல்ல மணமாக இருக்கும்.
பிரிட்ஜில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்க அதை சுத்தம் செய்யும் போது பேக்கிங் சோடாவை நீங்கள் பயன்படுத்தி வரலாம். இது கெட்ட துர்நாற்றத்தை உறிஞ்ச உதவுகிறது.
துண்டில் உள்ள பூஞ்சை வாசனையை போக்க வெந்நீரில் வினிகர் சேர்த்து ஊற வைத்து பின் துவைக்கவும். பூஞ்சை நாற்றம் போகும்.