ரேபிஸ் நோய் எப்படி பரவுது? அறிந்ததும் அறியாததும்….
வெறிநாய் கடி நோய் என்பது மனிதருக்கு விலங்குகள் மூலம் மரணத்தை ஏற்படுத்தும் நோய் ஆகும். இதற்கு ரேபிஸ் நோய் என பெயரிடப்பட்டுள்ளது.
இது விலங்குகளில் ஏற்படும் மூளை அலர்ஜி நோய் ஆகும். பாதிக்கப்பட்ட நாய், விலங்குகளின் கடியால் பரவும் ஒரு தொற்று நோயாகும்.
காடுகளில் வாழும் சில வகை வவ்வால், நரி, ஓநாய், வீட்டு விலங்குகளின் உடலில் வழக்கமாய் இந்த வைரஸ் வாழ்கிறது.
வைரஸ் விலங்குகள் கடிப்பதால் நேரடியாக, விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் கடிப்பதாலோ இந்த நோய் பரவுகிறது. வீட்டு விலங்கான நாய் மூலம் இந்த நோய் வேகமாக பரவும்.
இந்த வைரஸ் அதிகளவாக 5 ஆண்டுகள் வரை உறக்கத்திலிருந்து விட்டு பின்பு மீட்சி பெற்று மனிதரை தாக்கலாம்.
மூளை அலர்ஜி ஏற்படுத்தி மைய நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் தன்மை உள்ளது இந்த நோய். பின்பு மூளையை பாதிக்கிறது.
இறுதியில் மரணத்தை விளைவிக்கும் கொடூரமான நோயாகும். இந்த நோய் கிருமிகள் உமிழ் நீரில் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களை கடிக்கும்.
ஏற்கனவே உள்ள ஆறாத காயத்தில் உமிழ் நீர் படுவதால் மிக எளிதாக மனிதரின் ரத்தத்தில் கலந்து விடுகிறது.
ரேபிஸ் வைரஸால் தாக்கப்பட்டதாக சந்தேகப்படும் விலங்கு கடித்து விட்டாலோ இந்நோய் பரவும். ஒழுங்காக நோய் தடுப்புகளை மருத்துவமுறைகளை தொடங்க வேண்டும்.