அறுவை சிகிச்சையில் லேப்ராஸ்கோப்பி பங்கு குறித்து அறிவோமா!!

லேப்ராஸ்கோப்பி என்பது வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் ஒரு நவீன கருவி ஆகும்.

வயிற்றுப் பகுதியில் 10 மி.மீ., 5 மி.மீ., அளவிலான சிறிய துளைகள் இட்டு அதன் வழியாக நீளமான கேமரா மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை பயன்படுத்த உதவும்.

மேலும் வயிற்றின் உள் பகுதியில் உள்ள குடல், இரைப்பை, கல்லீரல், கர்பப்பை, சினைப்பை, அனைத்து வயிற்றுப் பகுதிகளையும் வெளிச்சமாகவும், 10 மடங்கு பெரியதாக்கி தெளிவாகவும் பார்க்க முடியும்.

இந்த நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் ஹெச்.டி. லெப்ராஸ்கோப்பி திரையில் அறுவை சிகிச்சை செய்யும் பகுதிகளை மிகவும் தெளிவாக காட்டும்.

இதனால் துல்லியமாகவும் பார்த்து பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். தற்போது 3 டி தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.

லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில் அப்பண்டிக்ஸ், பித்தப்பை, குடல்நோய், வயிறு உள் பரிசோதனை, கர்பப்பை, சினைப்பை அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது.

மில்லிமீட்டர் அளவிலான சிறிய தழும்பு மட்டுமே ஏற்படும். குறுகிய காலம் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும். விரைவில் குணமாகி வேலைக்கு சென்று விடலாம் என்பவை இதன் சிறப்பம்சங்கள்.