அரை நெல்லிக்காயின் அற்புத பயன்கள் அறிவோமா!!

அரை நெல்லிக்காயில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

இதை ஊறுகாய் போன்ற செய்யாமல் பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் அதன் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று அரை நெல்லிக்காய் சாப்பிடலாம்.

அரை நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக, அடர்த்தியாக இருக்க செய்யும். நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு இது உதவும்.

இக்காயில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் சருமத்தினை பளபளக்க செய்யும்.

கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. அதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.

இதில் இருக்கும் உடலுக்கு தேவையான இரும்பு சத்து ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.

வயிற்று புண், நெஞ்செரிச்சல், ஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் என வயிறு சார்ந்த அனைத்து உபாதைக்கும் நல்ல மருந்தாக இவை உள்ளது.

தலை சுற்றல், மயக்கம், வாந்தி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அரை நெல்லிக்காய் இருக்கும்.