லென்ஸ் உபயோகிப்பவர்களா… உங்களுக்கான டிப்ஸ் இதோ!
கண்ணாடிக்கு மாற்றாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது இளைஞர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. தினசரி, மாதம் முழுதும், ஆண்டு முழுவதும் உபயோகிக்கும் லென்ஸ் என்று பல வகைகள் உள்ளன.
லென்ஸை உபயோகிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது பற்றி அறிந்துக்கொள்வோம். முதலில் லென்ஸ் போட்டு துாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
காலாவதியான லென்சை பயன்படுத்துவது, லென்சை தண்ணீரில் கழுவுவது, உடைந்த லென்ஸ் போடுவது கண்களில் தொற்றை ஏற்படுத்தும்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
கண்ணுக்குள் லென்ஸ் இருப்பதால், கருவிழிக்குள் செல்லும் ஊட்டச்சத்துகள், இயல்பை விடக் குறைவாகவே செல்லும்.
எனவே எட்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக போடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
அதிக நேரம் லென்ஸ் பயன்படுத்தினால் கண்களில் வறட்சி ஏற்படும். கருவிழியில் வீக்கம் வரும் வாய்ப்புகளும் உள்ளன.
லென்ஸ் போட்டாலும் மாற்றாக எப்போதும் கையில் கண்ணாடி வைத்துக் கொள்வது பாதுகாப்பானது.
தாங்களாகவே சுகாதாரமாக உபயோகிக்கத் தெரிந்தால், 12 வயதிற்கு மேல் லென்ஸ் போடலாம்.