கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் அவசியம்
கோடை விடுமுறை என்றாலே பலரும் உணவில் கவனம் செலுத்துவதில்லை.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கு 'ஜங்க்' புட் அயிட்டங்களை அதிகளவில் கொடுக்க வேண்டாம்.
தின்பண்டங்களை அவர்கள் கண்ணில் படுமாறு வைத்திருந்தால், வீட்டில் அதிக நேரம் இருப்பதால், நிச்சயம் அவற்றை அதிகளவில் சாப்பிட விரும்புவர்.
எனவே, விடுமுறைக்கு பின் குழந்தைகளின் எடை அதிகமாகியிருப்பது காண முடியும்.
எனவே, தேவையற்ற தின்பண்டங்களை வாங்காமல், பழங்கள், சத்து நிறைந்த காய்கறிகளை அவர்களுக்கு உண்ண கொடுக்க வேண்டும்.
ஒன்று முதல் இரண்டு மணி நேரத்துக்குள் தான் 'டிவி', மொபைல்போன், லேப்டாப் பயன்பாடு இருக்க வேண்டும். நீண்ட நேரம் அவற்றிலே முழ்கியிருப்பதை தடுக்க வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.
வெயிலில் சிறிது நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் உற்சாகமுடன் இருப்பர்.