சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு என்ன? அறிவோமா!!
எட்டு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் காலையில் வெறும் வயிற்றில் ரத்த நாளங்களில் இருந்து பரிசோதிக்கப்படும் ரத்த சர்க்கரை 110க்கு கீழ் இருப்பது சர்க்கரை நோய் இல்லாத நிலை.
126க்கு மிகையாக இருப்பது ரத்த சர்க்கரை நோயை உறுதி செய்கிறது. 110க்கும் 125க்கும் இடையே இருப்பது சர்க்கரை நோயின் ஆரம்பநிலையை குறிக்கிறது.
இதேபோன்று காலை உணவிற்கு 2 மணி நேரத்திற்கு பின்பு ரத்த சர்க்கரை 140 க்கு கீழ் இருப்பது சர்க்கரை நோய் இல்லாத நிலை.
200க்கு மேல் இருப்பது சர்க்கரை நோயை குறிக்கிறது. 141 முதல் 199 வரை ஆரம்பநிலை சர்க்கரை நோயை குறிக்கிறது.
ரத்தசர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமெனில் உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை (பி.எம்.ஐ.) கொண்டிருக்க வேண்டும். அதிக உடல் எடை இருந்தால் அதை 3 -10 சதவீதம் குறைக்க வேண்டும்.
எடை குறைப்பதற்காகவும் சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்கவும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
கலோரி அதிகமுள்ள அரிசி சாதம், மைதா உணவுகள், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இரவில் குறைந்தது 7 மணி நேர உறக்கம் அவசியம். மன ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.